விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்ட புவனகிரி எம்.எல்.ஏ.,
பெண்ணாடம், : லாரி மோதி படுகாயமடைந்த வாலிபரை, புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.பெண்ணாடம், சோழன் நகர், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருஞானம் மகன் ஹரிஷ், 20. இவர் நேற்று காலை 8:30 மணியளவில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது தவறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஹரிஷ் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.அந்த வழியாக விருத்தாசலம் நோக்கி சென்ற புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஆம்புலன்ஸ் வரவழைத்து திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.