உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்குகள் மோதல்: சிறுவன் பலி

பைக்குகள் மோதல்: சிறுவன் பலி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் இறந்தார்.பண்ருட்டி அடுத்த முடப்பள்ளி காலனியை சேர்ந்தவர் சிவக்குமார்.இவரது மகன் சிரஞ்சீவி,16; இவர் கடந்த 16ம்தேதி காணும் பொங்கல் அன்று இரவு 9:00 மணிக்கு தனது நண்பர் ஜெயசூர்யா ஓட்டி வந்த பைக்கில் பின்னால் உட்கார்ந்து கொண்டு நெய்வேலி - முத்தாண்டிக்குப்பம் சாலையில் முத்தாண்டிக்குப்பம் கருப்புசாமி கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார்அப்போது எதிரே காட்டுக்கூடலுாரைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டி பைக், ஜெயசூர்யா ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த சிரஞ்சீவி பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும், பின் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி இறந்தார்.புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை