உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., வேலை வாய்ப்பில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை நெய்வேலியில் பா.ஜ., மாநிலத் தலைவர் வலியுறுத்தல்

என்.எல்.சி., வேலை வாய்ப்பில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை நெய்வேலியில் பா.ஜ., மாநிலத் தலைவர் வலியுறுத்தல்

நெய்வேலி :'என்.எல்.சி.,யில் அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கப் பெறும் 4,036 புதிய பணியிடங்களில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பா.ஜ., அண்ணாமலை பேசினார்.கடலுார் மாவட்டம், நெய்வேலியில், யாத்திரை மேற்கொண்ட பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:என்.எல்.சி., மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், இப்பகுதி இளைஞர்களுக்கு சொன்னதை செய்ய வேண்டும். நெய்வேலியை சுற்றியுள்ள கிராம மக்களின் விவசாய நிலங்களை எடுத்துதான் என்.எல்.சி.,யை உருவாக்க முடிந்தது. இங்கு உற்பத்தியாகும் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கும், மீதி பக்கத்து மாநிலங்களுக்கும் செல்கிறது.என்.எல்.சி.,யில் அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கப் பெறும் 4,036 புதிய பணியிடங்களில் வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனம் மக்களுக்காக இருக்க வேண்டும். ஆனால் அந்நிறுவனம், இங்குள்ள தி.மு.க.,வி னருக்காக நடந்து கொண்டிருக்கிறது.என்.எல்.சி., பிரச்னைகள் தொடர்பான 7 கோரிக்கைகளை, மத்திய அரசுக்கு அனுப்பி, அவற்றுக்கு விரைவில் தீர்வு காண்போம்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ