உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரத்த தான முகாம்

 ரத்த தான முகாம்

கடலுார்: அனைத்திந்திய கூட்டு றவு வார விழாவையொட்டி, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம் மற்றும் பொதுநல மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, முகாமை துவக் கி வைத்தார். பொது நல மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கண் சிகிச்சை முகாமில் ஏராளமானோர் பங்கேற்று கண் தொடர்பான நோய்களுக்கு ஆலோசனை பெற்றனர். கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி, ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். கடலுார் சரக துணைப்பதிவாளர் துரைசாமி, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் வெற்றிவேலன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்