பாட்டிலால் தாக்கியவர் கைது
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வாய்தகராறில், முதியவரை பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சவுன்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 56; இவருக்கும் சந்தைபேட்டை தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 50, என்பருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெயக்குமாரை பாட்டிலால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மண்கண்டனை கைது செய்தனர்.