உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் மீட்பு

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் மீட்பு

கடலுார் : கடலுார் சாவடியில் அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6ம் தேதி இரவு வார்டன் சாப்பிடுவதற்காக கேட்டை திறந்த போது, திருவண்ணாமலை, வேலுார், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் தப்பி சென்றனர். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய திருவண்ணாமலை, சிதம்பரத்தை சேர்ந்த இருவரை மீட்டனர். நேற்று தலைமறைவாக இருந்த வேலுார் சிறுவனை போலீசார் மீட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி