உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விளக்க கூட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விளக்க கூட்டம்

கிள்ளை: சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசை பாராட்டி விளக்க கூட்டம் நடந்தது.பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முகுந்தன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் ஞானசேகரன் வரவேற்றார். நகர பா.ஜ., தலைவர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மகேஷ் ஆகியோர் குடியுரிமை சட்டம் குறித்து விளக்கி பேசினர்.கூட்டத்தில், வழக்கறிஞர்கள் ராமராஜன், இனியராஜா, சிவபாரதி, கோபால்சாமி, வினோத், பா.ஜ., முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ