உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் விபத்தில் பலியான தம்பிக்கு ஈமச்சடங்கு செய்த அண்ணன்  

ரயில் விபத்தில் பலியான தம்பிக்கு ஈமச்சடங்கு செய்த அண்ணன்  

கடலுார் : செம்மங்குப்பம் அருகே ரயில்வே விபத்தில் பலியான தம்பிக்கு, அண்ணன் ஈமச்சடங்கு செய்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.கடலுார் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் பலியாகினர். இதில் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் நிமிலேஷ், சுப்ரமணியபுரத்தை சேர்ந்த சாருமதி, செழியன் ஆகியோர் பலியாகினர். விஸ்வேஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். இவரது தம்பி நிமிலேஷ் இறந்ததையொட்டி விபத்து நடந்த அன்றே உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து மீண்டும் மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்துவிட்டனர். நிமிலேஷின் அண்ணன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய வந்த பின்னர்தான் வாங்குவோம் என்றனர். அதையொட்டி நேற்று விஸ்வேஸ் டிஸ்சார்ஜ் ஆனார். அதன்டி நிமிலேஷின் உடலை பெற்று அவருக்கு சசோதரர் ஈமச்சடங்குகளை செய்தார். இந்த நிகழ்ச்சி அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை