மேலும் செய்திகள்
மனைவி கண்டிப்பு : கணவர் தற்கொலை
22-Feb-2025
கடலுார்: கடலுார் அருகே குடும்ப பிரச்னை காரணமாக, அரசு பஸ் டிரைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் விஜயகுமார்,41. கடலுார் டெப்போவில் அரசு பஸ்டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வெளியே சென்றவர், சுபா உப்பலவாடிகடற்கரையில் அமர்ந்து மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். மதியம் மனைவி கவுசல்யாவிற்கு போன்செய்து, விஷம்குடித்துவிட்டதாக தெரிவித்தார். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.
22-Feb-2025