உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: 4 பேர் காயம்

லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: 4 பேர் காயம்

திட்டக்குடி: ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த இடையப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 45; இவர், தனது மனைவி சித்ரா, 40, தந்தை கேசன், உறவினர் சண்முகம் ஆகியோருடன் திருப்பதிக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு ஸ்கார்பியோ காரில் திரும்பினார். காரை இடையப்பட்டியை சேர்ந்த பாரதிராஜா, 35, ஓட்டிவந்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் ராமநத்தம் அடுத்த லக்கூர் கைகாட்டி அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.முருகன், சித்ரா, கேசன், சண்முகம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்