உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

புவனகிரி : புவனகிரி அருகே தனியார் பஸ் கண்டக்டரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சீர்காழி, வடகால் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் புவனகிரி வழியாக சிதம்பரம் நோக்கிச் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். இரவு 7:10 மணிக்கு வடக்குத்திட்டை பஸ் நிறுத்தத்தில் ஏறிய நான்கு பேர் முன்விரோதம் காரணமாக விக்னேைஷ தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் வடக்குத்திட்டை காளிதாஸ், மேலமணக்குடி நரேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ