உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

 முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: முன்விரோத தகராறில், 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இந்த இருவருக்குமிடையே இடம் சம்மந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது. ராஜ்குமார் மனைவி மஞ்சு,29; என்பவர், வடிவேல் வீட்டின் வழியாக நடந்து சென்றார். அப்போது வீட்டிலிருந்த வடிவேல், மஞ்சுவை ஆபாசமாக திட்டி, தாக்கினார். இதனால் ராஜ்குமார் குடும்பத்தினருக்கும், வடிவேல் குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மஞ்சு, அவரது உறவினர் ராமலிங்கம், வடிவேல் மாமியார் கலையரசி ஆகியோர் பலத்த காயமடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் மஞ்சு, கலையரசி ஆகிய இருவரும் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த வடிவேல், வரலட்சுமி, ராஜ்குமார், ராமலிங்கம், கண்ணன், நாகராஜ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை