மேலும் செய்திகள்
மெக்கானிக்கை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
07-Oct-2025
வடலூர்: நகை, பணம் மோசடி செய்து பெண்ணை மிரட்டிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர் வடலூர், என்.எல்.சி., ஆபிசர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிந்துஜா, 40; தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டின் அருகில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி மதுபாலா. கடந்த ஜூன் மாதம், மதுபாலா தனது மாமியார் ராஜேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு உதவுமாறு சிந்துஜாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து சிந்துஜா, 2 சவரன் நகையை சிகிச்சைக்காக மதுபாலாவிடம் கொடுத்துள்ளார். மேலும் ஜிபே., மூலம் தவணைகளாக, ரூ., 2 லட்சம் வரை பணமும் கொடுத்துள்ளார். நகை, பணத்தை சிந்துஜாவிற்கு திருப்பி தராமல் சக்திவேல் குடும்பத்தினர் அலைக்கழித்து வந்துள்ளனர். இதுகுறித்து கேட்பதற்காக சக்திவேல் வீட்டிற்கு சிந்துஜா சென்ற போது, சக்திவேல் குடும்பத்தினர் சிந்துஜாவை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். சம்பவம் குறித்து சிந்துஜா வடலூர் போலீசில் புகார் அளித்தார். கொலை மிரட்டல் விடுத்த சக்திவேல், அவரது மனைவி மதுபாலா, தாய் ராஜேஸ்வரி ஆகிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Oct-2025