உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தகராறில் 4 பேர் மீது வழக்குப் பதிவு

தகராறில் 4 பேர் மீது வழக்குப் பதிவு

நடுவீரப்பட்டு: இடத்தை காலி செய்ய கூறியவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்,58; இவரது தோட்டத்தில் அவரது அக்கா குப்பாயி மகன் வடிவேல் என்பவர் வீடு கட்டி வசித்து வந்தார். வடிவேல் புதியதாக மனை வாங்கியதால், ராமலிங்கம் தனது இடத்தை காலி செய்யுமாறு கூறியதால் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த வடிவேலு, இவரது தம்பி வரதராசு, தந்தை காசிலிங்கம், தாய் குப்பாயி ஆகியோர் ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி தாக்கினர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வடிவேல், வரதராசு உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை