உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.1 கோடியில் பாலம் பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு

ரூ.1 கோடியில் பாலம் பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் 1 கோடி ரூபாயில் ஐந்து பாலங்கள் கட்டும் பணிகளை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி, மாருதி நகர் உட்பட ஐந்து இடங்களில் சிறு பாலங்கள் சேதமடைந்திருப்பதால் அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர். இதை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன்பேரில் சேர்மன் ஜெயந்தி கோரிக்கையை ஏற்று, ஐந்து பாலங்கள் கட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்.அதையடுத்து முள்ளிகிராம்பட்டு சாலையில் பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. சேர்மன் ஜெயந்தி பணியை துவக்கி வைத்தார். துணை சேர்மன் கிரிஜா, மேலாளர் சரவணன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வேலு, வீரமணி, கதிரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ