உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேல்பட்டாம்பாக்கத்தில் முதல்வர் திட்ட முகாம்

மேல்பட்டாம்பாக்கத்தில் முதல்வர் திட்ட முகாம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கி மனுக்கள் பெற்று முகாமை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜேம்ஸ் டி சாமி செய்திருந்தார்.முகாமில், பேரூராட்சி, மின்வாரியம், வருவாய் உள்ளிட்ட 13 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மனுக்கள் வழங்கினர்.பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சிகளின் கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை