மேலும் செய்திகள்
குத்துச்சண்டை போட்டி: தவ அமுதம் பள்ளி சாதனை
12-Dec-2024
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்குபள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன், லயன்ஸ் கிளப் தலைவர் நிஷாந்த், நாளா கிளப்தலைவர் தனரேகா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். புதுக்குப்பம் பங்குத்தந்தை யூஜின்டோன் கிறிஸ்து குடிலை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் கிறிஸ்து பிறப்புகுறித்து நடித்து காண்பித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. மதர் டிரஸ்ட் அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி, நாளா கிளப் மண்டலஒருங்கிணைப்பாளர் அபிராமி மகாவீர்சந்த் மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
12-Dec-2024