உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் பாதுகாப்புடன் நெல்லிக்குப்பத்தில் சேவல் சண்டை

போலீஸ் பாதுகாப்புடன் நெல்லிக்குப்பத்தில் சேவல் சண்டை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே, கடலுார் மாவட்டத்தில் முதல் முறையாக போலீஸ் பாதுகாப்புடன் சேவல் சண்டை நடந்தது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் அருகே சேவல் சண்டை நடத்த வழக்கறிஞர் திலீபன் போலீசில் அனுமதி கோரினார். போலீசார் அதற்கு அனுமதி தர மறுத்தனர். அதையடுத்து, வழக்கறிஞர் திலீபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதில், பிரச்னை இல்லாமல் சேவல் சண்டை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் போலீஸ் பாதுகாப்புக்கு உரிய தொகையை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.அதையடுத்து, நேற்று நெல்லிக்குப்பம் அருகே, மாவட்டத்தின் முதன் முறையாக அனுமதியுடன் சேவல் சண்டை நடந்தது. கால்நடைத்துறை டாக்டர்கள் சேவல்களை சோதனை செய்து மருத்துவ சான்று வழங்கிய பிறகு 500க்கும் மேற்பட்ட சேவல்கள் சண்டையில் கலந்து கொண்டன. டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த சேவல் சண்டையை ஆயிரக் கணக்கானோர் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை