முன்னாள் பிரதமருக்கு காங்., அஞ்சலி
சிதம்பரம்,: சிதம்பரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு காங்., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரத்தில், தெற்கு மாவட்டம் மற்றும் நகர காங் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மக்கின் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா ,வட்டாரத் தலைவர்கள் சுந்தர்ராஜன், செழியன், மாவட்டத் துணைத் தலைவர்கள் குமார் , சண்முகசுந்தரம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வி, அஞ்சம்மாள் முன்னிலை வகித்தனர். தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தெற்கு மாவட்ட காங்., தலைவர் செந்தில்நாதன் ,மாநில செயலாளர் சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேலன், ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் குமார் , சம்பந்த மூர்த்தி, தம்பு, குமராட்சி ரங்கநாதன், இமயராஜ் அன்பு என்கின்ற அன்பரசன், ஷாஜகான், உள்ளிட்ட பல பங்கேற்றனர்விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், காங்., சார்பில், அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, ராஜிவ்காந்தி, நகர தலைவர் ரஞ்சித், வட்டார தலைவர் சாந்தகுமார், ராவணன், விவசாய பிரிவு ஜெயகுரு, நகர தலைவர் வேல்முருகன், மகிளா காங்., லாவண்யா, மங்கை, உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.