மேலும் செய்திகள்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
25-Dec-2024
கடலுார் : கடலுார் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.கடலுார் செம்மண்டலம் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், செயலாளர் பழனிவேல், பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலை மற்றும் ஊக்கத்தொகை 5000 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்டத்தில் புயலில் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 5000 ரூபாய் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர்கள் இளங்கோவன், ஜெயசீலன், நடராஜன், மனோரஞ்சிதம், மாநகர செயலாளர் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
25-Dec-2024