மேலும் செய்திகள்
குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்
22-Sep-2024
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தொடர் மின்நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் 'செல்போன் டார்ச்லைட்டுடன்' சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தில் நேற்று முன்தினம் (5 ம்தேதி) இரவு இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக இரவு 11:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் துண்டிப்பை சரி செய்யாததால் நேற்று மாலை வரை மின்சாரம் இல்லை. இந்நிலையில் நரிமேடு பகுதி மக்கள் நேற்று இரவு 7:00 மணிக்கு கடலுார்- பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நடுவீரப்பட்டு போலீசாரின் சமாதானத்திற்கு பின் 7:30 மணிக்கு மின்சாரம் வழங்கினர். அதே போல் இரவு 7:30 மணிவரை மின்சாரம் வரவில்லை என முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் 'செல்போன் டார்ச்லைட்' ஒளியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி.ராஜா, இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மின்துறை சார்பில் மின்சாரம் வழங்கியும் அடிக்கடி டிரிப் ஆகிறது. எனவே இதை ஆய்வு செய்து மின்சாரம் விரைவில் வழங்குவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து இரவு 8:15 மணிக்கு மின்சாரம் வழங்கினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கடலுார்-பாலுார் வழி பண்ருட்டி சாலையில் 75 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
22-Sep-2024