| ADDED : நவ 26, 2025 07:49 AM
விடுமுறையின்றி தொடர் பணியால் ஈடுபடும் போலீசாருக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் வார விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு வார விடுமுறை என்பது நடைமுறை இல்லாமல் இரவு, பகலாக தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் உள்ளிட்டவைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை காரணமாக கூடுதல் பணிச்சுமை காணப்படுகிறது. மேலும் குடும்பத்தினர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது குறைந்து வருவதாக போலீசார் புகார் வாசிக்கின்றனர். வார விடுமுறை வழங்கினால் மன உளைச்சல் இல்லாமால் தொடர்ந்து வேலை செய்ய முடியும். இது சம்மந்தமாக எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.