உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி பசுமாடு பலி?

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி?

விருத்தாசலம்: விருத்தாலத்தில் மின்சாரம் தாக்கி பசுமாடு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது பசுமாடு நேற்று பகல் 11:00 மணியளவில், அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை கடந்து செல்ல முயன்றது. அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது. இதையறிந்த மாட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து, மாட்டை பார்த்து கதறி அழுதார். , தகவலறிந்து வந்த மின்துறை ஊழியர்கள் மாடு பலியான இடத்தை சோதனை செய்தனர். அப்போது, மின்சாரம் தாக்கி பசுமாடு இறக்கவில்லை என கூறினர்.பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது வேறு காரணமா என, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை