உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊட்டச்சத்து வார விழா

ஊட்டச்சத்து வார விழா

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் உமா வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் பேச்சுபோட்டி, வினாடி வினா, ஊட்டச்சத்து நிறைந்த உணவு தயாரிக்கும் செயல்முறை விளக்க போட்டிக்கான பரிசு வழங்கினர். மேற்பார்வையாளர் கலைமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை