உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்

விருத்தாசலத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்

விருத்தாசலம் : விருத்தாசலம் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். விருத்தாசலம் நகர மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கநாதன் போட்டியிடுகிறார்.இவர் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கமிஷனர் (பொறுப்பு) மணிவண்ணனிடம் மனுதாக்கல் செய்தார். உதவி தேர்தல் அலுவலர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க., நிர்வாகிகள் நகர செயலர் கலைச்செல்வன், தங்கராசு, அருளழகன் சோழன் சம்சுதீன், ரமேஷ், மலர்மோகன் உட்பட பலர் உடனிருந்தனர். தேர்தல் அலுவலகம் திறப்பு: பாலக்கரையில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி