உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரி செலுத்த தவறினால் நடவடிக்கை கடலுார் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வரி செலுத்த தவறினால் நடவடிக்கை கடலுார் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கடலுார்: கடலுார் மாநகராட்சிக்கு வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் காந்திராஜ் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் கட்டணங்கள் வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் மாநகராட்சிக்கு சொத்துவரி 49.20 சதவீதம் மட்டுமே செலுத்தியுள்ளனர். குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமக்கட்டணங்கள் ஆகியவை குறைந்த சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, வரியை தவறாது செலுத்த வேண்டும்.தவறினால் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை, கணினி வசூல் மையம், https:tnurbanepay.tn.gov.in. என்ற இணையதளத்தில் செலுத்தும் வசதி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை