உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு: வாலிபர் தாக்கு

முன்விரோத தகராறு: வாலிபர் தாக்கு

கடலூர் : வாலிபரைத் தாக்கி கொலை செய்ய முயன்றவரை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி அடுத்த கொறத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் முருகானந்தம், 30. கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கரும்பூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த திருவிழாவின் போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜசேகர் தாக்கியதில் முருகானந்தம் படுகாயமடைந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை