உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெற்பயிரில் அதிக லாபம் பெற வேளாண் துணை இயக்குனர் தகவல்

நெற்பயிரில் அதிக லாபம் பெற வேளாண் துணை இயக்குனர் தகவல்

விருத்தாசலம் : நெல் அறுவடைக்கு பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை கையாண்டால் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மை துணை இயக்குனர் தனவேல் தெரிவித்தள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நெற்கதிரின் மணிகள் 80 சதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்ந்து சேதாரமாவதைத் தடுக்கலாம்.அறுவடையின் போது ஈரப்பதம் 19 முதல் 23 சதம் இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதத்திற்குள் இருக்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து ஈரப்பதம் 13 சதத்திற்கு குறைக்க வேண்டும். இதனால் பூஞ்சாண வித்துக்கள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.அந்து பூச்சிகள் தாக்காமல் இருக்க மாலத்தியான் மருந்து 10 மி.லி., ஐ ஒரு லிட்டர் நீரில் கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும். ரகங்கள் வாரியாக தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விற்று லாபம் பெற முடியும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ