உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயலாக்க பயிற்சி

செயலாக்க பயிற்சி

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் பின்தங்கிய பகுதி மானிய நிதி திட்டத்தின் கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு செயலாக்க பயிற்சியை மாநில ஊரக வளர்ச்சி நிறுவன கூடுதல் இயக்குனர் துவக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பின்தங்கிய பகுதி மானிய நிதி திட்டத்தின் கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு நான்கு நாட்கள் செயலாக்க பயிற்சி நடக்கிறது.ஒன்றிய ஆணையாளர் துரைசாமி தலைமை தாங்கினார். சந்திரகாசன் முன்னிலை வகித்தார். முகாமை மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் கூடுதல் இயக்குனர் முருகன் துவக்கி வைத்தார்.பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சந்திரமோகன், ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் முழு ஊரக சுகாதாரம் குறித்து பயிற்சி அளித்தார்.நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை