உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுய உதவிக்குழுவினரிடம் கடன் வசூல் முகாம்

சுய உதவிக்குழுவினரிடம் கடன் வசூல் முகாம்

குறிஞ்சிப்பாடி : வடலூர் அடுத்த வடக்குத்து இந்தியன் வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கடன் வசூல் முகாம் நடந்தது.இந்தியன் வங்கியின் முன்னோடி வங்கிகளின் மேலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கநாதன், இந்தியன் வங்கி மேலாளர் காமராஜ், கள அலுவலர் சிலம்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலியபெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாராஈஸ்வரி, பழனிசாமி, மெரிட் தொண்டு நிறுவன செயலர் இந்திராகாந்தி, சக்தி தொண்டு நிறுவன செயலர் தேன்மொழி, தாய் தொண்டு நிறுவன செயலர் தானப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி மூலம் கடன் பெற்று திருப்பி செலுத்தாத சுய உதவிக்குழுவினரிடமிருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் கடன் வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ