உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆண்கள் கபடி போட்டிக்கு 4ம் தேதி வீரர்கள் தேர்வு

ஆண்கள் கபடி போட்டிக்கு 4ம் தேதி வீரர்கள் தேர்வு

கடலூர் : மாநில அளவிலான அமெச்சூர் கபடிக் கழக ஆண்கள் சிறியோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு 4ம் தேதி நடக்கிறது. இது குறித்து மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஆண்கள் சிறியோர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் சார்பில் விளையாட வீரர்கள் தேர்வு வரும் 4ம் தேதி காலை 9 மணிக்கு கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. வீரர்கள் 1.1.1992ம் ஆண்டுக்கு பின் பிறந்திருக்க வேண்டும். எடை 65 கிலோவிற்கு கீழ் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் போது வயது சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் அல்லது 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை