உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் பஸ் மோதி விவசாயி சாவு

தனியார் பஸ் மோதி விவசாயி சாவு

சிறுபாக்கம் : வேப்பூர் அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார். வேப்பூரை அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் நாட்டான் மகன் ராதாகிருஷணன்,45; இவர் தனது உறவினர் கருப்பசாமி மகன் மலையபெருமாளுடன் மொபட்டில் சென்றார். அப்போது பெண்ணாடத்தில் இருந்து வேப்பூரை நோக்கிச் சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மலையபெருமாள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ