உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் 143 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு

பண்ருட்டியில் 143 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு

பண்ருட்டி : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பண்ருட்டி பகுதியில் நேற்று 143 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பண்ருட்டி, நெல்லிக்குப்பம், காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி கமிட்டி, இந்து மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் 143 இடங்களில் 3 அடி முதல் 13 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதில் எலி, பசு, காளை, யானை, மயில், அன்னம், காமதேனு, பாம்பு, சிங்கம், கருடாழ்வார், ஆஞ்சநேயர், விநயாக ஐயப்பன், விநாயகர் சிவன்பார்வதி, முருகனுடன் உள்ள வாகனங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மண்ணாலான சிலைகளை வாங்கி பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ