உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்து: நிவாரண உதவி

தீ விபத்து: நிவாரண உதவி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. விருத்தாசலம் பழமலைநாதர் நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர்கள் சிங்காரம், சித்ரா. இவர்களது கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முத்துகுமார் எம்.எல்.ஏ., தலா 5,000 ரூபா# பணம் மற்றும் நிவாரண பொருட்களை அர” சார்பில் வழங்கினார். தாசில்தார் (பொறுப்பு) காமராஜ், துணை தாசில்தார் மெஹருன்னிசா, வருவா# ஆ#வாளர் பிரபாகரன், தேவசினேகம், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன், அ.தி.மு.க., நகர செயலர் கலைச்செல்வன், தே.மு.தி.க., நகர செயலர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். ரோட்டரி சங்கம்: ரோட்டரி சங்கத்தின் சார்பில் படுக்கை விரிப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. தலைவர் அமிருதீன், செயலாளர் செல்வமுருகன், பொருளாளர் ஜாகிர்உசேன், நிர்வாகிகள் ஜெயராமன், பழனிவேல், குருசாமி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ