உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

கரும்பு டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கரும்பு டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்ததால் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு பண்ருட்டியை அடுத்த ரெட்டிக்குப்பத்தில் இருந்து டிராக்டரில் கரும்பு ஏற்றி வந்தனர். அழகு பெருமாள்குப்பத்தைச் சேர்ந்த டிரைவர் அமாவாசை டிராக்டரை ஓட்டி வந்தார். நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி பாலம் அருகே வந்தபோது திடீரென பிரேக் போட்ட போது டிராக்டர் இன்ஜின் மற்றும் பெட்டியை இணைக்கும் இணைப்பு எதிர்பாராதவிதமாக உடைந்தது. இதனால் கரும்பு டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்தது. போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கரும்பை அகற்றிவிட்டு டிராக்டரை நிமிர்த்தினர். இதனால் கடலூர் - பண்ருட்டி சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி