உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் பெண்களுக்கு டாக்டர்கள் அறிவுரை

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் பெண்களுக்கு டாக்டர்கள் அறிவுரை

சிதம்பரம் : சிதம்பரம் ரோட்டரி, இன்னர்வீல், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா, உப்பு சர்க்கரை கரைசல் தினம், வளர் இளம்பருவத்தினர் தினம் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். ரோட்டரி மாவட்டம் 2980ன் உதவி ஆளுநர் பஞ்சநாதம் விழாவை துவக்கி வைத்தார். மிட் டவுன் ரோட்டரி முன்னாள் தலைவர் கேசவன், தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், டாக்டர் ராமநாதன் உள்ளிட்டோர் பேசினர். தாய்ப்பால் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.இந்திய குழந்தை நல மருத்துவர் சங்க 2012ன் தலைவர் டாக்டர் சிவப்பிகாசம், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் பிரச்னைகள் குறித்து விளக்கினர். அப்போது, குழந்தைகள் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும். 6 மாதம் வரை கட்டாயம் கொடுக்க வேண்டும், 2 வயது வரை இணை உணவுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ