உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜங்ஷனில் குடிநீர் வசதி தேவை ரயில்வே ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

ஜங்ஷனில் குடிநீர் வசதி தேவை ரயில்வே ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என தக்ஷிணா ரயில்வே ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.விருத்தாசலத்தில் தக்ஷிணா ரயில்வே ஊழியர்கள் சங்க கிளையின் புதிய நிர்வாகிகள் கூட்டம் கிளை அலுவலகத்தில் நடந்தது. கிளைத் தலைவர் ஜான்னோசுவா தலைமை தாங்கினார். செயலர் மோசஸ், பொருளாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர்.திருச்சி கோட்ட உதவி செயலர் பலராமன் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பற்றியும், கிளை வளர்ச்சி குறித்தும் பேசினார்.கூட்டத்தில் விருத்தாசலம் செக்ஷனில் உள்ள அனைத்து எல்.சி., கேட்டுகளுக்கும் குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்ய வேண்டும், நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் திருமண மண்டப வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஜங்ஷன் முன்புறம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் முகமது இப்ராஹிம், சுப்ரமணியன், விஜயன், பாஸ்கர், செல்வராஜ், சபாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி