உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் இன்று 340வது ஆராதனை விழா

புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் இன்று 340வது ஆராதனை விழா

சிதம்பரம் : புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ராகவேந்திரரின் 340வது ஆராதனை விழா இன்று 14ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.கடலூர் மாவட்டம், புவனகிரியில் ராகவேந்திரர் அவதார தலமான மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இக்கோவிலில் ராகவேந்திர சுவாமிகள் 340வது ஆராதனை விழா இன்று முதல் (14ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனையும் மற்றும் தீபராதனையும், நாளை 15 மற்றும் 16 தேதிகளில் காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனையும் மாலை ராகவேந்திரர் வீதியுலாவும் நடக்கிறது.கோவில் நிர்வாகிகள் ராமநாதன், உதய சூரியன், கதிர்வேல் மற்றும் அர்ச்சகர்கள் நரசிம்ம ஆச்சார், ரகோத்தம ஆச்சார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி