உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெரு மின்விளக்கு எரியாததால்பண்ருட்டியில் சாலை மறியல்

தெரு மின்விளக்கு எரியாததால்பண்ருட்டியில் சாலை மறியல்

பண்ருட்டி:பண்ருட்டி அருகே தெரு மின்விளக்குகள் எரியவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதித்தது.பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம், ஆர்.எஸ்.மணி நகரில் கடந்த 10 நாட்களாக தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் உட்பட 75 பேர் நேற்று மாலை 5.45 மணிக்கு ஜெயராம் தியேட்டர் எதிரில் திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர்.தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த பாபு, ஊராட்சி துணைத் தலைவர் துரைராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்ததை தொடர்ந்து 6 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.சாலை மறியலால் சென்னை- கும்பகோணம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை