உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு வெட்டும் தொழிலாளி மாயம்

கரும்பு வெட்டும் தொழிலாளி மாயம்

கடலூர்:கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியை காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவர் குள்ளஞ்சாவடியை அடுத்த அம்பலவாணன்பேட்டையில் தங்கி அப்பகுதியில் கரும்பு வெட்டி வருகிறார்.இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் ஆறுமுகத்தை காணவில்லை. அவருடன் வேலைக்கு வந்தவர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை.இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை