உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிக்கடி சாலை விபத்து: பொதுமக்கள் அச்சம்

அடிக்கடி சாலை விபத்து: பொதுமக்கள் அச்சம்

பண்ருட்டி:பண்ருட்டி - அரசூர் மாநில நெடுஞ்சாலை மணம் தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பண்ருட்டி - அரசூர் செல்லும் (கடலூர் - சங்கராபுரம்) மாநில நெடுஞ்சாலை மணம்தவிழ்ந்தபுத்தூர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மெயின்ரோட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.இப்பகுதியில் சாலையின் இருபுறமும் எதிரே கனரக வாகனங்கள் வரும் போது மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல்பவர்கள் சாலையை விட்டு ஒதுங்க முடியாத நிலையில் செடிகள் அடர்ந்தும் பள்ளமாகவும் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி இறப்பதும், காயமடைவதும் தொடர்கிறது.நெடுஞ்சாலைத் துறை யினர் அப்பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க சாலையில் ஒளி பிரதிபலிப்பான்களை பொருத்த வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் சாலையில் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி