உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில்ஆசிரியர்தின விழா

நெய்வேலியில்ஆசிரியர்தின விழா

நெய்வேலி:என்.எல்.சி., நிறுவனத்தில் செயல்பட்டு வரும் பொதுத் துறையில் மகளிர் அமைப்பு சார்பில் மந்தாரக்குப்பம் என்.எல்.சி., பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.அமைப்பின் பொதுச்செயலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை நிர்வாகிகள் லோகநாயகி, விஜயா, சுமதி முன்னிலை வகித்தனர்.அபெக்ஸ் பொரு ளாளர் விஜயலட்சுமி சிவக்குமார் வரவேற்றார். என்.எல்.சி., பொதுமருத்துவமனை அதிகாரி டாக்டர் உஷா, திலகவதி, ராஜேஸ்வரி, நாகலட்சுமி, விஜயலட்சுமி, பிரபா, எஸ்தர் பிரபா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 520 மாணவிகளுக்கு காலணிகள் வாங்க காசோலையும், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.சிறந்த ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை