உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட அளவிலான யோகா போட்டி240 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

மாவட்ட அளவிலான யோகா போட்டி240 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கடலூர்:கடலூர் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி கடலூரில் நேற்று நடந்தது. அண்ணா விளையாட்டரங்கில் நடந்த பொது போட்டியில் 10 பிரிவுகளிலும், தனித்திறன் போட்டிகள் 5 பிரிவுகளிலும் நடத்தப்பட்டது. இதில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 240 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.போட்டியை வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 18 நடுவர்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.ஒவ்வொரு பிரிவுகளிலும் 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் சென்னையில் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.நிகழ்ச்சிக்கு மாவட்ட யோகாசன சங்கத் தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் முன்னிலை வகித்தார். சங்க இணைச் செயலர் வெற்றிவேல் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர் அன்பழகி பரிசு வழங்கினார்.ஏற்பாடுகளை யோகா பயிற்சியாளர்கள் வெற்றிவேல், கிருஸ்டியான் செய்திருந்தனர்.சங்கச் செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ