உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்று உருவாக்கநாற்றங்கால் பண்ணை

மரக்கன்று உருவாக்கநாற்றங்கால் பண்ணை

நெய்வேலி:நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் உருவாக்குவதற்கான நாற்றங்கால் பண்ணை தொடங்கப்பட்டது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4ல் உள்ள செயின்ட பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் அருள்நாதன் முயற்சியின் பேரில் 5,000 மரக்கன்றுகளை உருவாக்குவதற்கான நாற்றங்கால் பண்ணை தொடங்கப்பட்டது.மேலும், அன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருள்நாதன், துணை முதல்வர் சார்லஸ், ஈஷா பசுமைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுவாமி மருதா, கலைச்செல்வன், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தனசேகரன். பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரேமன்ட் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை