உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பார்த்தீனியம் செடி அழிப்பு

பார்த்தீனியம் செடி அழிப்பு

சிதம்பரம்:சிதம்பரம் அக்னி சிறகுகள் சேவை அமைப்பு சார்பில் பரமேசுவரநல்லூரில் பார்த்தீனியம் களைச்செடி அழிப்பு முகாம் நடந்தது.சிதம்பரம் அருகே பரமேசுவரநல்லூரில் அக்னி சிறகுகள் சேவை அமைப்பு சார்பில் நடந்த பார்த்தீனியம் களைச்செடி அழிப்பு முகாமில் தலைவர் குபேரன் தலைமை தாங்கினார்.சங்க உறுப்பினர்கள் மணிமாறன், ஐஸ்வர்யா, விஜயராஜ், ஜான்பாண்டியன், சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் பங்கேற்று பார்த்தீனியம் நச்சுதாவரங்களை அழித்தனர். பின்னர் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.காட்டுமன்னார்கோவில்: குமராட்சி ஒன்றியம் ந.பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த பார்த்தீனியம் செடி அழிப்பு பணிக்கு ஊராட்சித் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.பள்ளியில் உள்ள பார்த்தீனியம் செடிகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகற்றினர்.தலைமை ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை