| ADDED : செப் 21, 2011 11:10 PM
சிதம்பரம்:உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்த
விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.விஸ்வகர்மா ஜெயந்தி விழா,
விஸ்வகர்மா முன்னேற்ற சங்க 14ம் ஆண்டு துவக்க விழா, ஐந்தொழிலாளர் முன்னேற்ற
தொழிற்சங்க 5ம் ஆண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா சிதம்பரத்தில்
நடந்தது. சங்க மாநிலத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இளைஞரணி செயலர்
ரமேஷ் முன்னிலை வகித்தார். நகர செயலர் முத்துக்குமார் ஆண்டறிக்கை
வாசித்தார். புலவர் கனகராஜன் பேசினார்.விழாவில் மத்திய அரசின் கைவினை
கலைஞர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 14 பேருக்கு காசோலை
வழங்கப்பட்டது.கூட்டத்தில், மறைந்த சிற்பி கணபதி ஸ்தபதியின் நினைவாக மத்திய அரசு தபால்
தலை வெளியிட கேட்டுக்கொள்வது.பொற்கொல்லர் நலவாரியம், கைவினை தொழிலாளர்
நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிய
தமிழக அரசுக்கு நன்றி. உள்ளாட்சித் தேர்தலில் விஸ்வகர்ம சமுதாய மக்கள்
அதிகம் உள்ள பகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்துவது உட்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.