உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமை ஆசிரியர்களுக்குதேர்தல் பணி பயிற்சி முகாம்

தலைமை ஆசிரியர்களுக்குதேர்தல் பணி பயிற்சி முகாம்

சிறுபாக்கம்:மங்களூர் ஒன்றியத்திலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலையொட்டி பயிற்சி முகாம் நடந்தது.மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளுக்கான தேர்தல் பணி குறித்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. பி.டி.ஓ., கலியபெருமாள் தலைமை தாங்கினார். கூடுதல் பி.டி.ஓ., செல்வநாயகி முன்னிலை வகித்தார். மேலாளர் காமராஜ் வரவேற்றார்.முகாமில் தேர்தல் வேட்பு மனு தாக்கல், வேட்பாளர்களின் தகுதி நிலை, பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இதில் அலுவலர்கள் ராஜாராமன், சக்திவேல், காமராஜ் மற்றும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை