உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் பரவலான மழைகீழ்ச்செருவாயில் 46 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் பரவலான மழைகீழ்ச்செருவாயில் 46 மி.மீ., பதிவு

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கீழ்ச்செருவாயில் 46 மி.மீ., மழை பதிவானது.ராமேஸ்வரம் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலான மழை பெய்தது.நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு மி.மீ., வருமாறு:கீழ்ச்செருவாய் 46, வேப்பூர் 12, காட்டுமையிலூர் 10, லால்பேட்டை 8, காட்டுமன்னார்கோவில் 5, ஸ்ரீமுஷ்ணம் 5, அண்ணாமலை நகர் 2.40, தொழுதூர் 2, சிதம்பரம் 1 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ