| ADDED : செப் 21, 2011 11:17 PM
கடலூர்:காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் மட்டும் செல்ல சிறப்பு பஸ்
இயக்க தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:இருபது நாட்களில் கடலூரில் இரு பள்ளி
மாணவர்கள் விபத்தில் இறந்துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சில்
அதிக கூட்டம் இருப்பதும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள்
இல்லாததும், மாணவர்களை பார்த்ததும் டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில்
நிறுத்தாமல், தள்ளி நிறுத்துவதும்தான் விபத்து ஏற்பட காரணம்.இது போன்ற
விபத்துக்களை தடுக்கும் விதத்தில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளதுபோல் காலை
மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் மட்டும் செல்ல வசதியாக சிறப்பு
பஸ்களை இயக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.