உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலூர் சிறை அதிகாரிகள் முன்னிலையில் மாஜி அமைச்சர் வேட்புமனுவில் கையெழுத்து

கடலூர் சிறை அதிகாரிகள் முன்னிலையில் மாஜி அமைச்சர் வேட்புமனுவில் கையெழுத்து

கடலூர்:திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மாஜி அமைச்சர் நேரு நேற்று மாலை சிறை அதிகாரிகள் முன்னிலையில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். எம்.எல்.ஏ., பதவியேற்க சென்னைக்கு காரில் சென்ற போது சாலை விபத்தில் இறந்தார்.காலியாக இருந்த திருச்சி மேற்கு தொகுதிக்கு வரும் அக்டோபர் 13ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இதற்கிடையே நில அபகரிப்பு வழக்கில் கைது செ#யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் உள்ள மாஜி அமைச்சர் நேருவை தி.மு.க., வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்தது.அதனைத் தொடர்ந்து நேருவின் வக்கீல்கள் பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் நேற்று மாலை கடலூர் மத்திய சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று சிறைத்துறை அதிகாரி முன்னிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் மாஜி அமைச்சர் நேரு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்து பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை